தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாமக்கல் KS தியேட்டர் அருகே மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சென்று திரும்பிய கணினி அறிவியலில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் என்ற 20 வயதான பரணிதரன் மாணவன் திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிக்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் பரணிதரனின் திடீர் மரணம் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் கடந்த 3 பிரச்சாரக் கூட்டங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டம், புஞ்சை புதுப்பாளையம் கிராமம் செட்டியம்பாளையத்தில் பொன்னுசாமி வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் மகன் பரணிதரன் என்பவர் கணினி அறிவியலில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாமக்கல் KS தியேட்டர் அருகே மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு பெண்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டம், புஞ்சை புதுப்பாளையம் கிராமம் செட்டியம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி வனிதா தம்பதியினரின் மகன் பரணிதரன் என்பவருக்கு கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் பரணிதரன் வலியை பொருட்படுத்தாமல் நண்பர்கள் உதவியுடன் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் வயிற்று வலி வர மாத்திரைகள் எடுத்துக்கொண்டு திங்கட்கிழமை கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் வயிற்று வலி அதிகரித்துள்ளது. ஆனால் பரணிதரன் பெற்றோரிடம் விஜய் பிரசாரத்திற்கு சென்றதை குறிப்பிடாமல் எனக்கு வயிறு அதிகம் வலிக்கிறது என கூறிய நிலையில் மகனை திருச்செங்கோடு வேலவன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துயுள்ளனர்.
அங்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் மாணவன் பரணிதரன் வயிற்று குடல் அடிபட்டு குடல் கிழிந்ததுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அல்லது கோயம்புத்தூர் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இத்தனை தொடர்ந்து பரணிதரன் பெற்றோர் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரணிதரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் பரணிதரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரணிதரன் நேற்று காலமாகி உள்ளார்.
மேலும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பிய சம்பவம் மாணவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. ஆகையால், தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்று கூட்ட நெரிசலில் மாணவன் பரணிதரன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், தவெக தலைவர் விஜய்யின் கடந்த 3 பிரச்சாரக் கூட்டங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு உடனடியாக விசாரணை செய்து வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும். நாமக்கல் மாவட்டம் புஞ்சை புதுப்பாளையம் கிராமம் செட்டியம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி வனிதா தம்பதியினரின் மகன் பரணிதரனின் மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு உடனடி தலையிட்டு வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.