மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மற்றும் காலிம்போங் மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் சிலிகுரி – மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.