தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முன்னாள் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்கள் V. செந்தில்பாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பல கட்சிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றனர். வந்தன. இதற்கு முன்பு இந்திய அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்த மரணம் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
ஆனால், விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள். மக்கள் மயங்கி விழுவதை கண்டு அவர்களை மீட்பதற்கு விஜய் எந்த நடவடிக்கையும் மோற்கொள்ளவில்லை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டதை அறிந்து விஜய் மக்களை பற்றி கவலை படாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். பாதிக்கப்படட மக்களை சந்திக்காமல் தவெக தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள், ரயில் நிலையங்கள், மக்கள் திரள் கூடும் பொது நிகழ்ச்சிகள் உள்படப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்ட நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் விபத்து ஏற்படுவது அரிது. அந்த வகையில், 2022 டிசம்பர் 28-ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, கால்வாயில் விழுந்த 8 பேர் உயிரிழந்தது முக்கியமான விபத்து என இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
ஒரு சாதாரண அரசியல் பிரச்சார கூட்டத்தில் இத்தனை பேர் அடுத்தடுத்து பலியாகியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய சோக நிகழ்வு, அன்றைய கும்பகோணம் மகாமகம் சம்பவத்தையும் நமக்கு நினைவூட்டி செல்கிறது. 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி தமிழகமே நிலைகுலைந்து போய்விட்டது. ஜெ. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்று அப்போதுதான் ஏறக்குறைய ஒருவருடம் ஆகியிருந்தது. 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணத்தில் மகாமக நிகழ்ச்சி என்பதால் தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்ததுடன், மகாமக குளத்தில் நீராட ஆவலாக காத்துக்கொண்டு இருந்தனர்.

லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்களின் கூட்ட நெரிசலை சரி செய்ய அங்குள்ள பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களை முன்கூட்டியே அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மகாமகம் குளத்தில் குளிப்பது என்ற தன்னுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் சொல்ல, அதிகாரிகள் திகைத்து போனார்கள்.
ஜெ. ஜெயலலிதாவின் திட்டமிடப்படாத அறிவிப்பால் காவல்துறையினர் குழம்பிப்போனார்கள். எனினும், அடுத்த நிமிடமே முதலமைச்சரின் பாதுகாப்பில் அத்தனை அதிகாரிகளும் கவனத்தை குவித்தனர். ஜெ. ஜெயலலிதா குளிப்பதற்காகவே குளியலறைகள் கட்டப்பட்டன. முதலமைச்சர் குளத்தில் நீராடும் வரை வேறு யாரும் நீராடக்கூடாது என்று அறிவிப்பும் வெளியானது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லட்சக்கணக்கான பக்தர்கள், இதற்காக 12 வருடங்கள் காத்து கிடந்தோம்? என்று அதிருப்தியடைந்து, காவல்துறையின் அறிவிப்பையும் தூக்கியெறிந்து நீராட வந்துவிட்டனர். இரட்டிப்பான கூட்டம் அந்த மகாமக குளத்தில் 40 ஆயிரம் பேர் வரைதான் குளிக்க முடியும். ஆனால் அதை விட இரண்டு மடங்கு கூட்டம் குழுமிவிட்டதால் காவல்துறையினரால் சமாளிக்க முடியவில்லை.
மேலும், ஏற்கனவே குளிக்க வந்த பக்தர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கும் ஆவலில் கலையாமல் நின்று விட்டனர். இதனால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. காலை 11 மணிக்கு, சரியாக தீர்த்தவாரி நேரத்தில், தனக்கென கட்டப்பட்டிருந்த குளியலறை பகுதிக்கு வந்தார் ஜெயலலிதா… குளக்கரைக்கு வந்த ஜெயலலிதா படிக்கட்டில் நின்றபடி பக்தர்களை நோக்கி கை அசைத்தார். இதனால் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் முண்டியடித்தனர். குளத்தில் இறங்கிய ஜெயலலிதா அப்போது தீர்த்தவாரி ஆரம்பம் என்று அறிவித்து வானத்தை நோக்கி 3 முறை வால்டர் தேவாரம் சுட்டார்.

ஏற்கனவே நெரிசலில் சிக்கி தவித்து கொண்டிருந்த பக்தர்கள், துப்பாக்கி சத்தத்தை கேட்டு பதறியடைத்து கொண்டு சிதறி ஓட துவங்கினார்கள். இதனால் பக்தர்கள் நீராடிவிட்டு வந்தவர்களால் வெளியேற முடியவில்லை. ஏற்கனவே குளத்தில் இறங்கியவர்களால் மறுபடியும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நின்று கொண்டு இருந்தார்கள். மேலும், பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச்சுவர் மீது பலர் ஏறி ஜெயலலிதாவை பார்க்க முயன்றனர்.
அதில் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதனிடையே தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் நீராடினார்கள்.. அவர் தலையில் இவர் தண்ணீர் ஊற்ற, இவர் தலையில் அவர் தண்ணீர் ஊற்ற அமோகமாக நடந்தேறியது புனித நீராடல்.
ஆனால், கூட்ட நெரிசலில் மிதிபட்டே 48 பக்தர்கள் உயிரிழந்தனர். இதில் பலரது உயிர் அந்த குளத்திலேயே போனது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், இவ்வளவு அசம்பாவிதங்களும் ஜெயலலிதாவின் காதுக்கு போகாதவாறு அதிகாரிகள் பார்த்து கொண்டனர். முதல்வரின் பாதுகாப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருந்ததுடன், புனித நீராடலுக்கு பிறகு அவர்களை பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து சென்றனர். ஜெயலலிதா சென்னைக்கு சென்ற பிறகுதான் நடந்த விவரத்தை சொல்லி இருக்கிறார்கள். அந்தவகையில் கும்பகோணம் சம்பவம் மிகப்பெரிய சோக வடுவாக அமைந்து நிலையில் இன்று இந்த கரூர் நிகழ்வு பார்க்கப்படுகிறது.