கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரிபட்டி தரணி மண்டபத்தில் அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் நவம்பர் 30-ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான, இருப்பிட, சாதி சான்றிதழ்களை பெற முடியும்.
அதேபோல் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு தரப்பில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகை பெற இந்த திட்டர்த்தில் மனு அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல் கட்டிட வசதி, குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், சுய உதவிக்குழு மூலம் கடன் பெறவும் இந்த முகாம்களில் மனு அளிக்கலாம். அதேபோல் மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் மிணைப்பு, இணையவழி வீட்டு மனைபட்டா பெற மனு அளிக்கலாம்.
இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த முகாம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகின்றது.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரிபட்டி தரணி மண்டபத்தில் அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. பூசாரிபட்டி ஊராட்சி, அனுப்பர்பாளையம் ஊராட்சி, ஏரிப்பட்டி ஊராட்சி, திப்பம்பட்டி ஊராட்சி, ஏ. நாகூர் ஊராட்சி மற்றும் கோளி கவுண்டன் பாளையம் ஊராட்சிகள் முதலான ஊராட்சிகள் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டசெயலாளார் பத்மநாபன் அவர்கள், துணை ஆணையாளர் கலால் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் C. சியாம் பிரசாத் அவர்கள் பொள்ளாச்சி(தெ) வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன் அவர்கள், அனுப்பர்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் அவர்கள் மற்றும் பொள்ளாச்சி வட்டாட்சியர் அவர்கள், பொள்ளாச்சி வடக்கு தனி அலுவலர் அவர்கள், பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் இந்த முகாவில் கலந்துகொண்டனர்.