மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை மகள் பிரியதர்ஷினி ராமநாதபுரம் சட்ட கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த 10 -ந் தேதி தனது நண்பர்களுடன் கீழ் மதுரை சந்திப்பில் ரயில் ஏறும்போது கீழே விழுந்ததில் பின் தலையில் காயம் ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

ஆனால் பிரியதர்ஷினி இறந்து மூன்று நாட்கள் ஆகியும் பணத்திற்காக தங்களது மகள் இறந்ததை மருத்துவமனை நிர்வாகம் மறைத்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்படுத்தியது.