திருச்சியில் 2021- ஆம் ஆண்டு நவம்பர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்துப் பணியில் ஈடுட்டிருந்தபோது ஆடு திருடும் கும்பலால் வெட்டிப் படுகொலை, விருதுநகர் காளையார்கோவிலில் கடந்த மார்ச் மாதம் தனிப்படை காவலர் மலையரசன் என்பவரே ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை, கடந்த மாதம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் சென்னை எழும்பூரில் தாக்கப்பட்டு உயிரிழந்து என தொடரும் காவல்துறையினர் கொலைகள் தொடர்ந்து கொண்டே செல்லும் நிலையில் உடுமலைபேட்டையில் சிறப்பு ஆய்வாளர் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாக இன்று மாறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை சண்முகவேல் அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக MLA மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் இரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளர். காவல்துறை வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.
இந்நிலையில், காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மூர்த்தி தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் திடீரென உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 6 மாதங்களில் 3 காவல்துறையினர் தாக்கப்பட்டு படுகொலை சம்பவத்தால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.