‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வாயிலாக இளைஞர்கள் இன்று கடலூர், சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை இன்று பார்வையிட்டனர்.
பண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக்கலை, நீர்மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு,தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்றகலாச்சார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை கடந்தாண்டு மே 24-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டப்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டு பிரான்சு, ஜெர்மனி, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை, தென்ஆப்ரிக்கா, மற்றும் பிஜி உள்ளிட்ட 14நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, 15 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அந்த வகையில் இன்று கடலூர், சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை இன்று பார்வையிட்டனர்.