சென்னை பெரம்பூர் தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த ஒரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றும், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளதால் ஜோசப் விஜய்யின் வேட்புமனுவை நிராகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக ஜோசப் விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. இதில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கிலும் விஜய் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஆகையால், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் ஜோசப் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதில் வயது குறித்த விவரங்கள் தவறாக இருந்தன. இதனையடுத்து இன்று மீண்டும் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் அதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஜோசப் விஜய் வழங்கிய பிரமாண பத்திரத்தின் ஆவணங்களில் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பில் பெரும் மாற்றம் உள்ளது.
அதாவது, சென்னை பெரம்பூர் வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 410,58,82,196/- (சுமார் 410 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு மனுவில் இதில் மொத்த மதிப்பு ரூ. 404,58,57,196/- (சுமார் 404 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பெரம்பூர் மனுவில் துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 15,57,29,421/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி பத்திரத்தில், துணைவியார் பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 15,51,79,421/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5.5 லட்சம் ரூபாய் வித்தியாசம் உள்ளது.

வெள்ளி பொருட்கள் விஷயத்திலும் கணக்கு தவறாக காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, சென்னை பெரம்பூர் மனுவில் மனைவி சங்கீதாவிடம் உள்ள வெள்ளிப் பொருட்கள் ரூ. 15,00,000/- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை பெரம்பூர் தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த ஒரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு வேட்புமனுவில், 2 கிலோ, ரூ. 4,75,000/- எனக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல இன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2 கிலோ, ரூ. 25,000/- என மிகக் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது ஏற்பட்ட ஒரு சம்பவத்திற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் சில பிரிவுகளின் கீழ் கூடக்கோவில் போலீசார் இந்த எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். என இந்த வழக்கு விபரத்தை திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரியது மட்டுமின்றி, வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஒரு வழக்கை ஒரு இடத்தில் ஒப்புக்கொண்டு மற்றொரு இடத்தில் மறைப்பது தகவல் மறைப்பு என்ற பிரிவின் கீழ் வரும். வேட்புமனு பரிசீலனையின்போது, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி மனுவை நிராகரிக்கக் கோரினால் தேர்தல் அதிகாரி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.
இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (ஏப்ரல் 6) இன்னும் முடிவடையாததால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் வேட்புமனு நிராகரிப்பிலிருந்து ஜோசப் விஜய் தப்பிக்க முடியும். வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 7-ந் தேதியில், ஜோசப் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது இறுதி செய்யப்படும்.