திண்டுக்கலில் தீ விபத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆன பெண்ணிற்கு திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் பாண்டியராஜன் தலைமையில் வீட்டு உபயோக பொருட்கள் ரூ. 15 ஆயிரம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் வடக்கு ரெங்கநாதபுரம் NGO காலனி பொன்னம்மாள் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் விறகு அடுப்பில் தண்ணீர் காய வைத்து விட்டு நெருப்பை அணைத்துவிட்டு சென்றுள்ளார்

ஆனால், காற்றினால் தீப்பொறி பறந்து கூரை வீடு பற்றி முழுவதுமாக எரித்துவிட்டது. அந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் பீரோ, கட்டில், சின்டெக்ஸ் மற்றும் ஆடைகள் என அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த சோக சம்பவத்தைகேள்விப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கினர். அதில், கிச்சன் செட், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான ஆடைகள் உட்பட வீட்டு உபயோக பொருட்கள் ரூ. 15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் உறுப்பினர் சையது அபுதாஹிர் , மாவட்ட பொருளாளர் ஆ. சுசீலா மேரி, கிராம நிர்வாக அலுவலர் சைமன், கிராம நிர்வாக உதவியாளர் ராஜ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும், சங்கத்தின் ஆயுள் உறுப்பினருமான அ. ஜெயசீலன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆர்.பாண்டி, தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் பாத்திமா பீவி, ராஜேஷ் குமார் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.