அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக், டீ பிரேக் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், ‛சுய இன்பம்’ செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கிய எரிகா லஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் . ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எரிகா லஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் 40-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார்.

கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மன அழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மன அழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது. இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்’ வழங்கி வருகிறார்.

மேலும் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுய இன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுய இன்ப ‛பிரேக்கை’ அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.