இப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நடப்பதே கஷ்டம்.. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரை, 21 பெண்கள் தாங்களாகவே முன்வந்து கல்யாணம் செய்து கொண்டு 21 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வங்கதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மொரு மியா பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரிடம் பெண்கள் அவர்களாகவே வந்து, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்களாம்.. அவரை வேண்டாம் என்று சொல்ல மனசு வரவில்லையாம். அப்படிச் சொன்னால் அவர்களை இன்சல்ட் செய்தது போல ஆகிவிடும், என்பதால் அவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாக மொரு மியா சிரித்தபடியே சொல்கிறார். இவராக எந்தப் பெண்ணையும் தேடிப்போய் திருமணம் செய்து கொள்ளவில்லையாம்.. அதுமட்டுமல்ல, கல்யாணம் செய்த பெண்களில், இவரைவிட, வயதில் மூத்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.
எந்த பெண்ணாவது தன்னை நெருங்கி வந்து, கல்யாணம் செய்துக்கலாமா என்று கேட்டால், .. இத்தனை பேரை திருமணம் செய்திருக்கிறார் என்றால் பெரிய வீடு, வசதியான வாழ்க்கை என்று நினைக்க வேண்டாம்.. மொரு மியாவின் வாழ்க்கை மிகவும் சாதாரணமானது. அவர் ஒரே ஒரு சின்ன ரூம் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார். அவருடைய முக்கிய வருமானமும் பிச்சை எடுப்பதுதான்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது.. 21 மனைவிகளும் அவருடனேயே பிச்சை எடுக்கச் செல்வார்களாம்.. ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் செல்வதில்லை. தினமும் ஒரு மனைவி மொரு மியாவுடன் பிச்சை எடுக்கச் செல்கிறார். அடுத்த நாள் இன்னொரு மனைவி என்று மாறி மாறி ஷிப்ட் போட்டு அவருடன் செல்கிறார்கள். சரி.. 21 பேரையும் திருமணம் செய்திருக்கிறாரே.. அவர்களுடைய பெயர்களாவது நினைவில் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார்கள். அங்கேதான் இன்னொரு சுவாரஸ்யம்..
மொரு மியாவால் 21 மனைவிகளின் பெயர்களையும் சொல்ல முடியவில்லை. அவருக்கு நினைவில் இருந்த சில பெயர்களை மட்டுமே சொல்கிறார். அதில் ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பருல் ஆகிய 8 பெயர்கள் உள்ளன. இத்தனை மனைவிகள் இருப்பதால் எல்லோருடைய பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வதே கஷ்டமாக இருக்கிறதாம் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.