இங்கிலாந்தில் பள்ளி படிக்கும் மாணவருடன் உடலுறவு கொண்டதாக 30 வயது உடற்கல்வி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டனில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 30 வயது பிரோன்வென் ஜேம்ஸ் 16 வயது மாணவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆசிரியை கைது செய்யப்பட்டு வழக்கு இப்போது நடந்து வருகிறது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரோன்வென் ஜேம்ஸ் மறுத்துள்ளார். அங்குள்ள வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர், “மாணவர் முதலில் பிரோன்வென் ஜேம்ஸை ஸ்னாப் சாட்டில் நட்பு பட்டியலில் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால், அதை பிரோன்வென் ஜேம்ஸ் நிராகரித்துள்ளார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று கொண்டு இருக்கிறார்.

இதையடுத்து இருவரும் மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். முதலில் அந்த மெசேஜ்கள் எல்லாம் நார்மலாகவே தொடங்கியுள்ளது. பிறகு காதலாக மலர்ந்த அது, பாலியல் ரீதியான மெசேஜ்களாகவும் மாறியுள்ளது. பின்னர் இருவரும் காரில் முத்தமிட்டு கொண்டனர்” என்றார். மற்றொரு சந்தர்ப்பத்தில், டென்னிஸ் போட்டியை டிவியில் போட்டுவிட்டு, இருவரும் முத்தமிட்டு கொண்டு, பாலியல் உறவில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், பாலியல் உறவு மூலம் அந்த மாணவரை பிரோன்வென் ஜேம்ஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மாணவரை காதலிப்பதாகவும், இருவரும் சேர்ந்து வேறு இடத்துக்கு சென்றுவிடலாம் என்றெல்லாம் கூறியதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இந்த உறவு தனக்கு நல்லது போல இருந்ததாகவும் தனது விருப்பத்திற்கு உட்பட்டே எல்லாம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், கொஞ்ச காலத்திற்கு பிறகே தான் திட்டமிட்டு இந்த உறவுக்குள் இழுக்கப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பிரோன்வென் ஜேம்ஸ் சவுத்தாம்ப்டனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டது உட்பட மொத்தம் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரோன்வென் ஜேம்ஸ் மறுத்துள்ளார். நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.