மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் படைத்துள்ளார். ஜார்ஜியாவில் 46 நாடுகளை சேரந்த 107 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர்.

கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம்ம, 2-வது ஆட்டம் டிராவில் முடித்ததால் இருவரும் சமநிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இநு்த போட்டியில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.