அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தீப்பந்தம் கையில் ஏந்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் பைரவன் தலைமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP Wo: 24797/2015 தீர்ப்பு நாள் : 23.10.2024-ன் படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மேலும் உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு தமிழ்நாடு அரசு செய்யக்கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும், நெடுஞ்சாலை துறையை தனியார் மயப்படுத்துதலை கை விடவேண்டும், மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசு பராமரித்திட வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களுக்குமணி வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத (UNSKILLED EMPLOYEES) க்குரிய ஊதிய மாற்றம் ரூ. 5,200/- ரூ. 20.200/- தர ஊதியம் ரூ. 1900/- வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பி சண்முக மூர்த்தி போராட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர்கள் என். உதயசூரியன், ஏன். ஆசை தம்பி, மாவட்டத் துணைத் தலைவர் இளவரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் கோரிக்கைகளை விளக்கி துவக்க உரையாற்றினார்.மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.கே. ஷேக் தாவூத் நிறைவுரை ஆற்றினார். போராட்டத்தில் மீன்வளத்துறை அலுவலர் சங்க நிர்வாகி கே. சன்னசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே.காந்தி, எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆர். ராகவன், ஓய்வூதியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் எம். மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.போராட்டத்தின் முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. மூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.