சின்னத்திரையோ அல்லது வெள்ளித்திரையோ நடிகைகளுக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் தொடங்கி தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள், ரசிகர்கள் வரை ஏதாவது ஒரு வகையில் பாலியல் ரீதியான தொல்லைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்குச் சமீபத்திய உதாரணமாக நடிகை சனா அல்தாப் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்கள் அமைந்துள்ளன.
15 வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் சனா அல்தாப் முக்கியமானவர். இவருக்கு கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல் பட உலகிலிருந்து சனா அல்தாப் விலகியுள்ளார். 2014-ஆம் ஆண்டு ஹக்கீம் ஷாஜகான் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது கணவருடன் அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்தச் சூழலில், சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்ற தொழிலதிபர், சசனா அல்தாப்க்குத் தொடர்ந்து மெசேஜளை அனுப்பி, அவருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொல்லைகள் தாங்காமல், தனக்கு வந்த அநாகரிகமான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை சனா அல்தாப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எல்லை மீறிய மெசேஜ்: அந்த ஸ்கிரீன்ஷாட்களில், “அன்புள்ள சனா… எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ஒரு தொழிலதிபர். உங்களுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று அவர் வெளிப்படையாகவே கேட்டுள்ளார்.

மேலும், “எப்போது என்னுடன் வர உங்களால் முடியும் என்பதையும் தெரிவியுங்கள்” என்று அந்த தொழிலதிபர் கேட்டுள்ளார். மாலத்தீவு அல்லது துபாய்க்குச் செல்லச் தயாராக இருப்பதாகவும், எனது இந்தச் ஆஃபர் பற்றி நன்றாக யோசியுங்கள்” என்றும் தொடர்ச்சியாக பல மின்னஞ்சல்களை அனுப்பி சனாவுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார். தற்போது இந்தத் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் பாலாஜியின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.