விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்பனேரி கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன். இவரது மனைவி முனீஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமாக, முனீஸ்வரி தனியாக வசிப்பதுடன், கட்டிட பணிகளை மேற்கொள்ளும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்பவர், மதுரை மாவட்டம் மேலூரில் வசிக்கும் மூதாட்டியை கவனித்துக்கொள்ள ஆள் தேவைப்படுவதாக முனீஸ்வரியிடம் கூறியுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் மேலூருக்கு வந்த முனீஸ்வரியை சுமார் 20 வயது வாலிபர் ஒருவர் டூவீலரில் தும்பைப்பட்டி அருகே தாமரைப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த 30 வயது மதிக்கத்தக்க 4 நபர்களிடம் முனீஸ்வரியை ஒப்படைத்த வாலிபர் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் நால்வரும் சேர்ந்து, முனீஸ்வரியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவரது அரை பவுன் தங்கச்சங்கிலி, தங்க குண்டு, வெள்ளி கொலுசு, மற்றும் செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். அங்கிருந்து மேலூர் வரை முனீஸ்வரி நடந்தே சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.