உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இளம் பெண் ஒருவர் 22 வயதில் இப்போது 6-வது முறையாக கர்ப்பமடைந்த இதுகுறித்து அந்த பெண் சொன்ன தகவல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயதான பெண். இப்போது உத்தரப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செக்கப்புக்காக சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்தபோது, அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே அப்பெண்ணின் விவரங்களை மருத்துவர் கேட்டார்.. பிறகு வயது என்ன என்று கேட்டார்.. அதற்கு அந்த பெண் 22 வயது என்று சொன்னதுமே அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டார் மருத்துவர். காரணம், இந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருக்கிறதாம்.. மருத்துவர்ரிடம் பரிசோதனைக்கு வந்தபோது இந்த பெண் பேசுவது வீடியோவாகவும் வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவில், “5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6-வது குழந்தை? என்று மருத்துவர் கேட்கிறார்.

அதற்கு அப்பெண், “15 வயசிலேயே எனக்கு திருமணம் நடந்துவிட்டது. வரிசையாக பெண் குழந்தைகள்தான் பிறந்தன.. ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும்தான் உள்ளது.. என் கணவர் இன்னொரு ஆண் குழந்தையை விரும்புகிறார்.. எங்கள் குடும்பத்தினரும் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றவே நான் 6-வது முறையாகக் கர்ப்பம் தரித்திருக்கிறேன்” என சொல்கிறார்
இதைக்கேட்டதுமே கடுப்பான மருத்துவர், அந்தப் பெண்ணை எச்சரிக்கிறார்.. இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து மருத்துவர், தம்பதியினரை அறிவுறுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.