அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் வசந்தா தலைமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியத்தில் உடனடியாக காலிப்பணியிடம் நிரப்பி வேண்டும், பதவி உயர்வில் தேக்க நிலையும், பதவி உயர்வு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேலை நேரம் 9 to 4 என மீண்டும் அறிவிப்பு செய்ய வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய மருந்தாளுநர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வசந்தா தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.