ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 32 பேர் காயமடைந்த நிலையில் 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா அருகேயுள்ள பிப்லோட் என்ற கிராமத்தில் அரசு இடைநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. நேற்று வழக்கம்போல் பள்ளியில் காலையில் இறைவணக்கம் பாடிக்கொண்டு இருக்கும்போது பள்ளி கட்டிடத்தின் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் சிக்கிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணி பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மாணவர்கள் ஜலாவரில் உள்ள எஸ்ஆர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மோசமாக காயமடைந்த 2 மாணவர்களும் உயிரிழந்த தகவல் வந்ததை தொடர்ந்து பலி 7 ஆக உயர்ந்துள்ளது.இந்த விபத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழந்த வேதனையைத் தெரிவித்துள்ளனர்.