அரியலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜையை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஆன்மீக மாதமான ஆடி மாதம் பிறந்தாலே போதும், கோயில்களில் ஆங்காங்கே பாட்டு கச்சேரி, கூழ் வார்த்தல், வேப்பிலை என விசேஷங்கள் களைகட்டும். இந்த மாதத்தில் தான் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், சுமங்கலி பூஜை என ஏகப்பட்ட விசேஷங்கள் வருகின்றன.

ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதுவும் அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தாலோ அல்லது திருமணமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்தாலோ உங்கள் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலையிலேயே சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் குறிஞ்சாக்குல தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது பெரியநாயகி அம்மன் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.