செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்மார் முதல் நிலை ஊராட்சியில் போலச்சேரி கிராமத்தில் பொன்மார் போலச்சேரி, டிஏபிசி ஆகிய மூன்று சாலைகளை இணைக்கும் முக்கூட்டு சாலையில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடி மதிப்பில் மாம்பாக்கம் முதல் போலச்சேரி வரையிலும் ,டிஏபிசி அடுக்குமாடி குடியிருப்பு முதல் போலச்சேரி சாலை வரையிலும், பொன்மார் முதல் போலச்சேரி வரையுள்ள மூன்று சாலைகளுக்கு புதியதாக தார் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக விவசாய தொழிலாளர் அணியின் அமைப்பாளரும், பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவருமான பொன்மார் ஸ்ரீ. நாராயணன் தலைமை தாங்கினார். பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட கழக மீனவர் அணி துணை அமைப்பாளருமான பொன்மார் டி .வெங்கடேசன் ,பொன்மார் ,
மேலைகோட்டையூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மேலைக்கோட்டையூர் எல். சுரேஷ், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணை அமைப்பாளர் போலசேரி பி.என். எஸ். செந்தில் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள் .

பொன்மார் ஊராட்சி மன்றத்தின் 8-வது வார்டு உறுப்பினர் போலச்சேரி ராஜா, மற்றும் 9-வது வார்டு உறுப்பினர் போலச்சேரி பிஎன்எஸ் .தீபாசெந்தில் ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றனர்கள். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமான எஸ் ஆர் எல். இதயவர்மன் கலந்துகொண்டு புதியதாக அமைக்கப்பட உள்ள மூன்று தார் சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

இவருக்கு பொன்மார் மற்றும் போலச்சேரி மற்றும் டி எ பி சி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அனைவருடனும் இணைந்து சால்வையுடன் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கட்சியினர்கள் சால்வை அணிவித்தும் கட்சி வேட்டி அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்கள்.