மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்று கூறி நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்றும் அஜித்குமார் மீது தான் சந்தேகம் பெண் வயதான தாயுடன் சாட்டை யூடியூப் சேனலில் பரபரப்பாக பேட்டி அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த ஜூலை 27-ந் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை காவல்துறை கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு நிலையில் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் நிகிதா என்பவர் சாட்டை யூடியூப் சேனல் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், வணக்கம் சார் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மடப்புரம் காளி அம்மன் கோவிலில் அம்மாளை தரிசனம் செய்ய வந்தோம். எங்க அம்மாவுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லை அவங்க ஸ்கேன் எடுக்க சொல்லி இருந்தாங்க டாக்ட்டரு… அவங்களால சரிவர பேச முடியல… கல் ஸ்கேன் எடுக்க சொல்லி இருந்தாங்க….
சோ ஸ்கேன் எடுக்க போனப்ப நகையெல்லாம் கழட்டி எங்க கார்ல பேக்ல வச்சிருந்தோம்… காரோட பின் இருக்கையில வச்சிருந்தோம்… அவங்க திடீருனு மடப்புரம் காளி அம்மனை பார்த்த பிறகுதான் ஸ்கேன் எடுப்பேன்னு சொல்லிடாங்க … அதனால ஸ்கேன் எடுக்காம வேச்ச நகையோட அப்படியே காளி அம்மன் டெம்பிள் ஸ்டாப்பிற்கு வந்தோம்… டெம்பிள் ஸ்டாப்பில் ஒருத்தர் யூனிபார்ம் போட்டவர்ஒருத்தரு நின்னுகிட்டு இருந்தாரு… இவங்களுக்காக வீல்சேர் கேட்டேன் நானு.. வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கார நானே நிப்பாட்டிட்டு வர்றேன்னு எங்ககிட்ட கார் சாவி வாங்கிக்கிட்டாரு …
உள்ள வீல்சேரோடை அம்மாயோட சாமி தரிசனம் பண்ண போயிட்டு ரொம்ப நேரம் கழிச்சுத்தான் சாவி கொண்டு வந்து கொடுத்தாரு… திரும்ப ரிட்டன் வந்து அவர வண்டிய எடுத்து தர சொன்னேன்… வண்டிய எடுத்து வந்து தந்தரு … அப்படியே வண்டிய எடுத்துட்டு கெளம்பிடேன்… கொஞ்சதூரம் போனபிறகு.. …..திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.