இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமன்ஜோத் கவுர் அபார அரைசதத்தால் இங்கிலாந்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T -20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானம் நடைபெற்ற முதல் T -20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து மகளிர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் உள்ள சீட் யுனிக் கிரிக்கெட் மைதானம் இரண்டாவது T -20 ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால் இந்திய அணி முதல் ஓவரில் அதிரடியாக தொடங்க 1.4 ஓவர்களில் 14 ரன்கள் எடுத்து இருக்கையில் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்து ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைய 4.4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து நிலையில் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்ஸிடன் இணைய 5.1 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 பந்துகளில் 1 ரன்ஆட்டமிழக்க இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய அமன்ஜோத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸிடன் இணைய சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 30 ரன்களும் அமன்ஜோத் கவுர் 15 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 14 ரன்களும் எடுத்து 10 ஓவர்கள் முடிவவில் 64/3 எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் பக்கம் இருந்தது.
ஆனால் 11 ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து டாப் கீயறுக்கு மாற இந்திய அணியின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு பவுண்டரியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய 2 ஓவரில் இங்கிலாந்து அணியின் பந்துவிச்சை நாலாபுறமும் சிதறடிக்க மெல்ல மெல்ல இந்திய அணியின் பக்கம் திரும்பியது. மறுபுறம் நிதானமாக இருந்த அமன்ஜோத் கவுர்வும் அதிரடிக்கு திரும்பினார். ஆனால் 14.2 ஓவரில் சிறப்பாக அடிக்கக் கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உப்பட 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் அமன்ஜோத் கவுர்வுடன் இணைய இருவரும் சேர்ந்து அதிரடி காட்டினார்கள். 16.6 ஓவர்களில் ஒரு பவுண்டரியுடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எமிலி ஆர்லோட் மற்றும் லாரன் ஃபைலர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
182 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இங்கிலாந்து அணியின் சோபியா டங்க்லி மற்றும் டேனி வயட்-ஹாட்ஜ் களமிறங்கினர். ஆனால் இருவரும் 1 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் டாம்சின் பியூமண்ட் இருவரும் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து முயற்சி செய்தபோது கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3.3 ஓவரில் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

டாம்சின் பியூமண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் இருவரும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாம்சின் பியூமண்ட் 10.5 ஓவர்களில் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும் இங்கிலாந்து அணி விக்கெட்களை இழக்க வெற்றி முழுமையாக இந்திய அணி பக்கம் திரும்பியது. இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கவுர் மற்றும் தீப்தி சர்மா தல 1 விக்கெட்களையும் விக்கெட் வீழ்த்தினர்.