திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, புளியம்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தொடங்கி வைத்தார்.

மேலும் மு.பெ. கிரி அவர்கள் 4 ஆண்டுகள் திமுக சாதனைகள் விளக்கி பேசினார். இந்த நிகழ்வில் செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் த. மனோகரன், த. செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்திக்குமார், கட்டமடுவு கீ. சேட்டு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மற்றும் செங்கம் மேற்கு ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் க. பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்..