இடும்பாவனம் சற்குணநாதர் ஆலய சீனதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பெருவிழாவில் பங்கெடுத்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டு இருக்கும் அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு சற்குணநாதர் ஜீரோதாரணை அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய யாகசாலை பூஜையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் உலகப் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டிய சிறப்பையாக நடைபெற்றது. யாகசால பூஜையில் வைத்து பூஜைக்கு வட்ட புனித நீரானது சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர தாரை தப்பட்டைகள் சிவ வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு ஆலயம் வளம் வந்து ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வட்டமிட பக்தர்கள் அரோகரா அரோகரா என்று புனித நீரானது ஊற்றப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மங்களநாயகி உடனுறை சற்குருநாதர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இடும்பாவனம் சற்குணநாதர் அருள் பெற்றனர்.