79-வது சுதந்திர தினம் பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். அதேபோல சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் 5-வது முறையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கோயம்புத்தூர் தெற்கு மாவட்டம்,பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் மதுக்கரை முன்னாள் ஒன்றிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவருமான சந்திரசேகர் தலைமையில் 79-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில், சிறுவர்கள் பாரத மாதா மற்றும் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.