கடுகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, கைலாசநாதர், செல்லியம்மன், ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆகிய 5 திருக்கோவில்களின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, கைலாசநாதர், செல்லியம்மன், ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது . இந்த 5 திருக்கோவில்களின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது.

அதன் பின்னர் ஆற்றில் இருந்து புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பத்தர்கள் பக்தி பரசவத்தில் இருக்க கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றபட்டது. இதனையடுத்து கலசத்தில் ஊற்றபட்ட புனிதநீர் பக்தர்களின் மீது தெளிக்கபட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லங்குறிச்சி கோவில் தர்மகர்த்தாக்கள் G.ராமதாஸ், G.வெங்கடாஜலபதி, G.R.வரதராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் நாட்டாமைகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.