சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதனால் அவர் இந்த குழந்தைக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பதிலளித்தார் . அப்போது, எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தொடர்பில் இல்லை. எனக்கும், எனது குழந்தைக்காகவும் நான் இப்போது போராடிக் கொண்டு இருக்கிறேன். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதனால் அவர் இந்த குழந்தைக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.

முறைப்படி என்னை திருமணம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்பார்ட்மென்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஜூடிசியல் செப்பரேஷனில் இருப்பதாக கூறினார். அதனை நம்பி தான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்தேன். ஒன்றரை மாதமாக அவருடன் எந்தவொரு தொடர்பிலும் நான் இல்லை. கோவிலில் எங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.
தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இப்போது நான் தொடர்பில் இல்லை. 7 மாத கர்ப்பிணியாக தற்போது உள்ளேன். திடீரென என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த குழந்தக்கும், எனக்கும் பதில் வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளேன். மாதம்பட்டி ரங்கராஜை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால், அவரிடம் என்னை பேச விடாமல் தடுக்கின்றனர். பேச விடாமல் தடுப்பது அவருடைய நண்பர்கள், தம்பி, குடும்பத்தினராக இருக்கலாம். நான் மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ வேண்டும். இந்த குழந்தைக்கு அவர் அப்பா. அதனை மட்டும் தான் நான் புகாராக தெரிவித்துள்ளேன்.

புகைப்படம் வெளியிட்டது குறித்த கேள்விக்கு, மாதம்பட்டி ரங்கராஜ் தொழிலில் இருக்கிறார். அவருடைய அப்பா, அம்மா எங்களது திருமணம் குறித்து வெளியில் தெரிய வேண்டாம் என்று கூறி இருந்தனர். அதனால் நாங்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். இப்போது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதால், எனது குழந்தைக்காக நான் போராடி வருகிறேன். எனக்காக நான் போராடவில்லை. என்னுடைய குழந்தைக்காகத்தான் இப்போதும் போராடுகிறேன். குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என்று அவர் கூறினார். ஏற்கனவே என்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலும், தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தும் என்னை தாக்கியுள்ளார்.

கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் என்னிடம் பேசவில்லை. கடைசியில் அந்தப் பேச்சுவார்த்தை தாக்குதலில் தான் முடிந்தது. நான் அவருடன் கடைசியாக பேச முயற்சித்தபோது அவர் எல்லோர் முன்பும் சேர்ந்து என்னை தாக்கினார். அவர் என்னுடன் பேச தயாராக இல்லை என்றும், அவருடன் இருப்பவர்கள் என்னிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளதாகவும் கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் எனது கணவர். என் வயிற்றில் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அது மட்டும்தான் எனது கோரிக்கை என ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.