கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் அமைந்துள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவல வாளகத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் “கர்மவீரர் காமராஜர்”. முன்னாள். எம்.எல்.ஏக்கள். வி.கே. பழனிச்சாமி., மகாலிங்கம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர். சி. சுப்பிரமணியம். ஆகியோருக்கு திருவருவ சிலையுடன் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை. தமிழ் வளர்ச்சி.மற்றும். செய்தி துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் இரா. நவநீதகிருஷ்ணன் அவர்கள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள்ளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவுன் குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர்.இரா. நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, தெற்கு ஒன்றிய தலைவர்.எஸ். என்.காணியப்பன், ஒன்றிய தலைவர் கதிர்வேல், கவுன்சிலர் பாத்திமா மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டார்கள்