தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்று தவெகவின் விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் கையில் பீர் பாட்டிலுடன் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் R. விஜய் சரவணன், திமுக சார்பில் சண். ராமநாதன், பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார் ஆகியோர் களம் கண்டனர். அதில், ஆர். விஜய் சரவணன் 87,705 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் 70,750 வாக்குகள் பெற்றார்.
அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 26,790 வாக்குகளை பெற்றார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் சரவணன் 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமநாதனை தோற்கடித்துள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் எம்.எல்.ஏ R. விஜய் சரவணன் கையில் பீர் பாட்டிலுடன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.