எனது வங்கிக் கணக்கில் பிரச்சனை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை. ஆகவே நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், உங்களுக்கு பின்னர் பணம் அனுப்புகிறேன் என்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வாட்ஸ் அப் செய்தியால் நீலகிரி பற்றி எரிந்து கொண்டுள்ளது.
டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர வளர ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் போன்ற மக்களின் வாழ்க்கையில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. மேலும் சமூக ஊடகங்கள், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும், தகவல்களைப் பகிர்வதற்கும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. இதனால் எவ்வளவு நன்மைகள் உள்ளதே அதற்கு எதிர் மறையாக பல தீமைகளும் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டே உள்ளது. உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இன்றைய சைபர் குற்றவாளிகள் பலர், நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
பிரபல நபர்களின் பெயரில் போலியான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா அக்கவுண்டை உருவாக்கி அவர்களின் முகப்பு படம் போல் முகப்பு படத்தை வைத்து அவர்களின் தகவல்கள் அனைத்தும் அப்படியே ஒரிஜினல் போல் உருவாக்குகின்றனர். அதனை அடுத்து அந்த கணக்கில் இருந்து அவர்களுடன் நட்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள். அவர்களும் இவ்வளவு பெரிய ஆள் நம்மிடம் பணம் கேட்கிறாரே என்று ஏமாந்து பணத்தை அளித்து விடுகிறார்கள். இப்படி பல சைபர் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே இப்படி சைபர் குற்றவாளிகள் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த ஓராண்டாக இருப்பவர் லட்சுமி பவ்யா தண்ணீரு. இந்நிலையில் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவின் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பல் போலி வாட்ஸ்-அப் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் ஆட்சியருடன் நட்பில் உள்ளவர்கள், அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மெசேஜில் தனது வங்கிக் கணக்கில் பிரச்சனை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை.
ஆகவே நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், உங்களுக்கு பின்னர் பணம் அனுப்புகிறேன் என்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுவது போல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலர் இதுகுறித்து ஆட்சியரிடமே நேரில் சென்று கேட்டுள்ளனர். அப்போதுதான் சைபர் கிரைம் கும்பலின் கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் ஆய்வாளர் பிரவீனா தேவி தலைமையிலான சைபர் கிரைம் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
முதற்கட்டமாக இந்த போலி வாட்ஸ்-அப் கணக்கு வியட்நாமில் தொடங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தனது வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.