மூச்சு விட முடியாத பாம்புக்கு செயற்கை சுவாசம் தந்து பாம்பை மீட்ட லிஜோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. கேரளாவில் மந்தமங்கலத்தில் ராஜீவ் என்பவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்துள்ளார்.இந்த் கோழிகளை பாதுகாப்பதற்காகவும், வேறு எங்கும் சென்றவிடக்கூடும் என்பதற்காகவும், வலை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, அந்த வழியாக ஒரு பாம்பு வந்துள்ளது. கோழிப்பண்ணையை பார்த்ததுமே, அதற்குள் நுழைய முயன்றுள்ளது.. ஆனால், எதிர்பாராத விதமாக கட்டப்படிருந்த வலைக்குள் பாம்பு சிக்கி கொண்டது.. இதனால் அந்த பாம்புவால் வெளியேற முடியவில்லை.. இரவெல்லாம் வலையில் சிக்கியபடியே தவித்தது. மறுநாள் அந்த வீட்டின் உரிமையாளர் கோழிப்பண்ணையை பார்வையிட வந்தபோதுதான், வலையில், பாம்பு ஒன்று அசைவற்றுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்ததன் அடிப்படையில், அவர்களும் விரைந்து வந்தனர்.

வலையில் மாட்டிக் கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை மீட்டபோது பாம்பு எந்த அசைவுகளும் இல்லை. ஆனால், அது உயிருடன் இருப்பது மட்டும் சிறுசிறு அசைவுகளின் மூலம் தெரியவந்தது. இதனால் வனத்துறையினரில் ஒருவர் லிஜோ கச்சேரி பாம்புக்கு மூச்சு விட முடியவில்லை என்பதை கண்டுபிடித்தார். உடனடியாக பாம்பின் வாய் வழியாக செயற்கை சுவாசம் அளித்தார். மேலும் பாம்பின் மூளைக்கு ரத்தம் செல்ல ஏதுவாக, அதன் வாலைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு, மசாஜ் செய்தார். உடனே பாம்பு விருட்டென்று நிமிர்ந்தது..
இதைப்பார்த்த லிஜோ, “நீ உயிர் பிழைச்சுட்டே, இனிமே போகலாம் பையா’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். சிறிது நேரத்திலேயே அந்த பாம்பு அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து சென்றுவிட்டது. லிஜோ பாம்புக்கு செயற்கை சுவாசம் தந்து பாம்பை மீட்ட சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்.. “நீ உயிர் பிழைச்சுட்டே, இனிமே போகலாம் பையா’ என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை இணையவாசிகள் ஆர்வதுடன் கண்டுகளித்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

கேரளாவில் வனவிலங்குகளுக்கு சிபிஆர் எனப்படும் வாய் வழியே மூச்சு காற்றை செலுத்தி, உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் லிஜோ கச்சேரி மிகவும் பிரபலம் வாய்ந்தவராம்.. சமீபத்தில்கூட, மான் குட்டி ஒன்றிற்கு இதுபோன்ற ஒரு சிகிச்சையை அளித்து, அது செய்திகளில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இப்போது பாம்புவை காப்பாற்றியதால், லிஜோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.