“போடா… “மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற” என திமுக MLA உதயசூரியன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் 2026 -ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.
எதிர்க்கட்சியான அதிமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். மறுபுறம் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சாரம் முன்னெடுத்து கடந்த 4 ஆண்டுகளில் திமுக மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்ட கொண்டு சேர்ப்பதும், திமுக உறுப்பினர் சேர்க்கையையும் மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக MLA உதயசூரியன் கலந்து கொண்டார். அப்போது இளைஞரை ஒருவர் அவரிடம் மோசமான சாலைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர் திட்டி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது உதயசூரியன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் திமுக சாதனைகளை விளக்கும் போஸ்டர்களை கொடுத்து இருக்கிறார்.
மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், “நீங்கள் சாலைகள் எதுவும் போடவில்லை. இந்த போஸ்டரை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டுக் கோபமடைந்த MLA உதயசூரியன் அந்த இளைஞரைப் பார்த்து, “போடா” என்று திட்டியுள்ளார்.. அந்த நபர் தொடர்ந்து கேள்வி கேட்டபோது, “மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற” என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த நபர், “நான் மரியாதையாகத்தான் பேசுகிறேன்” என்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.