கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் அந்த அணை நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. எந்த நிகழ்ச்சியில், தேனி திமுக எம்பி தங்க தமிழ்செல்வன், கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரிஐங்கரன், மாவட்ட ஆட்சியர் என பலரும் வந்து இருந்தனர்.
அப்போது முல்லை பெரியாறு அணையை திறந்துவிட்டபோது பூக்களை தூவிய காட்சிகளை தத்ரூபமாக படம் பிடித்து தனது ஐடிவிங் சார்பில் ரீல்ஸ்காக பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரிஐங்கரன் தரப்பில் பதிவிடப்பட்டு இருந்தது. கழுகு பார்வையில் தண்ணீர் செல்லும் காட்சிகளும் வனப்பகுதிகளும் அந்த ரீல்ஸில் இடம் பெற்று இருந்தது. பின்னணி இசையுடன் பதிவு செய்யப்பட்ட இந்த ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது கேரள வனத்துறை கவனத்திற்கும் சென்றுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதியில் எப்படி டிரோன் கேமரா கொண்டு படம் எடுக்கலாம் என்று கேரள வனத்துறை, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இருந்தனர். அதே சமயம் கேரள வனத்துறை புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க்கப்பட்டது.