திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றிய பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கையில் துடைப்பத்துடன் மருத்துவமனையை சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த பெண் பணியாளர், நோயாளிக்கு கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சிரிஞ்சை சரி செய்வது போன்ற காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

நோயாளிக்கு உதவியாக இருந்த அவரது உறவினரே இதை அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையை நம்பி வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலை, ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மக்களுக்குத் தங்கள் உயிரைப் பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.