கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மருமகள் தனது மாமியாராரே தலையை வெட்டி உடல் தனியாக.., தலையை தனியாக புதைத்து விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த கொலையை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துள்ள இந்த கொடூர சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சப்பான் மகன் ராஜா. இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நந்தினி என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளுடன் வளையாம்பட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்ட நிலையில் நந்தனி விரியூர் கிராமத்தில் 2 குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார். அப்போது விரியூர் கிராமத்தில் பிசியோதெரபிஸ்ட் மையம் நடத்தி வரும் மரிய ரொசாரியோவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது நந்தினிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் மரியரோசாரியோ குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி கடந்த 2019 -ஆம் ஆண்டு நந்தினியை மரியாரோசாரியோ திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர்கள் வடசேமபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இவர்களுக்கு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானப் பெண் தனது மகனை மடக்கிப் போட்டு விட்டால் என்ற ஆத்திரத்தில் கிறிஸ்தோப்மேரி அடிக்கடி தகராறு செய்து, தனது மகனை விட்டு பிரிந்து செல் என வற்புறுத்தி வந்தார். இந்நிலையில், மரியாரோசாரியோ மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல பிரச்னை ஏற்பட்டது.
நந்தினி மீது யாரோ செய்வினை செய்துள்ளனர். அதனை சரிசெய்ய பரிகாரம் செய்ய வேண்டும் என மரியாரோசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரி தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த 29-ந் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு, மகன் மரியாரோசாரியோவின் சம்மதத்துடன், மருமகள் நந்தினியை, கிறிஸ்தோப்மேரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசேவியர் மனைவி நெமிலி ஆகியோர் அழைத்து சென்றனர். அன்று காலை கிறிஸ்தோப்மேரி மட்டும் வீடு திரும்பினார். பரிகாரம் முடிந்ததால் மருமகள் நந்தினி வீடு திரும்ப கூடாது என்பதால், உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் என கிறிஸ்தோப்மேரி தெரிவித்தார்.
மறுநாள் 30, 31 மற்றும் 1-ந் தேதியும் நந்தினி வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. தனது தாய் கிறிஸ்தோப்மேரியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகம் அடைந்த மரியாரோசாரியோ சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறும், தனது தாய் மீது சந்தேகம் உள்ளது என புகார் அளித்தார். சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குபதிந்து மாமியார் கிறிஸ்தோப் மேரியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணான தகவல் கூறியதால், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நந்தினியை, தனது மகன் மறுமணம் செய்தது கொண்டது கிறிஸ்தோப்மேரிக்கு பிடிக்கவில்லை. இதனால் நந்தினியை, எனது தோழியுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக கடந்த கடந்த 29-ந் தேதி, தனது தோழி நெமிலியுடன், மறுமகள் நந்தினிக்கு செய்வினை பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அழைத்து அழைத்த சென்று, அங்கு நந்தினியின் கை, கால்களை கயிற்றால் கட்டியுள்ளனர். பின்னர், அங்கு தயாராக வைத்திருந்த கத்தியால் நந்தினியின் தலையை வெட்டி கொலை செய்தனர். உடல் தனியாகவும், தலையை தனியாகவும் குழிதோண்டி புதைத்து விட்டு இருவரும் வீடு திரும்பியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கிறிஸ்தோப் மேரியை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று, சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நந்தினியின் நிர்வான உடல் மற்றும் 100 மீட்டர் துாரத்தில் பனைமரத்தடியில் புதைக்கப்பட்டிருந்த தலை, நந்தினி அணிந்திருந்த உடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, மண் வெட்டி ஆகியவற்றை தாசில்தார் வைரக்கண்ணன் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து உடலை பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர், தாய் கிறிஸ்தோப்மேரி மற்றும் நெமிலி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். மாமியாரே மருமகளின் தலையை துண்டித்து கொலை செய்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.