இரண்டு குழந்தைகள் கண்முன்னே “எப்படி தூக்கில் தொங்கணும் தெரியுமா? கயிறு சரியாக இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டு மனைவியின் மரணத்தை நேரடி ஒளிபரப்பு போல வீடியோவில் பதிவு செய்த கொடூர கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம் பாய்னபள்ளி கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ், ரயில்வேயில் லோகோ பைலட்டாக பணிபுரிகிறார். ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணவேணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் தொடர் சந்தேக ஏளன பேச்சுகளால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லி, ஃபேனில் தூக்குப் போட முயன்றுள்ளார். அப்போது அவரது இரண்டு குழந்தைகளும் அந்த இடத்திலேயே இருந்க்க ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் தனது மனைவியை காப்பாற்றுவதற்கு பதிலாக, தன்னுடைய செல்போனை எடுத்து கிருஷ்ணவேணி ஃபேனில் தூக்கு போடுவதை வீடியோ எடுக்க தொடங்கினார். குழந்தைகள் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுத்துக் கொண்டே, “எப்படி தூக்கில் தொங்கணும் தெரியுமா? கயிறு சரியாக இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டு கொடூரமான அட்வைஸ்களை தந்துள்ளார் இதன் உச்சக்கட்டமாக மனைவியின் மரணத்தை ஒரு நேரடி ஒளிபரப்பு போல வீடியோவில் பதிவு செய்துவிட்டார்.
கணவன் வீடியோ எடுத்து கொண்டிருக்கும்போதே தாயின் மரணத்தை பிஞ்சு குழந்தைகள் நேரில் பார்க்க கிருஷ்ணவேணியின் உயிர் மெல்ல மெல்ல பிரிந்தது. அவர் உயிரிழந்த பிறகுதான், இந்த வீடியோ ஆதாரங்கள் வெளியே கசிந்தன. இதைப் பார்த்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இறுதியில், இது தற்கொலை அல்ல, கணவனின் தூண்டுதலால் நடந்த கொலை என கிருஷ்ணவேணியின் அப்பா புகார் கொடுக்க அந்த புகாரின் அடிப்படையில், ராஜம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸை கைது செய்துள்ளனர்.