சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சினை இலங்கை சேர்ந்த 18 வயதான யாசினி என்ற இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோயம்பேட்டில் உள்ள ஒரு மதுபான பாருக்கு, இலங்கை சேர்ந்த 18 வயதான யாசினி என்ற இளம்பெண் நண்பர்கள் சிலருடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பாரில் நடனம் ஆடிய போது யாசினி தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியாக தெரிகிறது.

இந்நிலையில் பாரில் இருந்து வெளியே வந்ததும் யாசினி நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதை நோட்டமிட்ட எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் காரில் அவர்களை பின்தொடர்ந்து செய்துள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து காரால் இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் இளம்பெண் யாசினி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த யாசினி என்ற பெண் இலங்கை தமிழர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாரில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.