கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் மயிலேறி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மெட்ரோ சிட்டி என்ற இடத்திற்கு அருகே புறம்போக்கு நிலங்கள் உள்ளதாகவும் அதை அந்தப் பகுதி அருந்ததியர் இனத்தைச் சார்ந்த மக்கள் காலகாலமாக குடியிருந்து வரும் நிலையில் பட்டா இல்லாததால் இந்த மெட்ரோ சிட்டி அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் மதுக்கரை தாசில்தார் அவர்களுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மெட்ரோ சிட்டி அருகே அரசு புறம்போக்கு நிலம் சம்பந்தமாக மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கை எடுக்காமலும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு புறம்போக்கு நிலத்தில் அமர்ந்து எங்களுக்கு பட்டா தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.