அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், நமங்குணம் நியாயவிலைக் கடையில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் வாகன சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், நமங்குணம் நியாயவிலைக் கடையில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் வாகன சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், நமங்குணம் ஊராட்சிப் பகுதியில் உள்ள வயது முதிர்ந் தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டை தாரர்களின் இல்லத்திற்கே சென்று “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ் ரேசன் பொருட் களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.வராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி, துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் சாய் நந்தினி, மாவட்ட வழங்கல் அலுவலர் இராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், இரவி , ஒன்றிய திமுக செயலாளர்கள் பூ .செல்வராஜ், வி.எழில் மாறன், பொன் செல்வம், ஆர். கலியபெருமாள், இரா. மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வருவாய் வட்டாட்சியர் வேலுமணி மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.