நாமக்கல் மாவட்டம், காரைக்குறிச்சி ஊராட்சி, செல்லியாயிபாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் மதுரைவீரன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 7 நாள் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மாரியம்மன் மதுரைவீரன் திருக்கோவில் முதல் ஞாயிறுகிழமை இரவு பூப்போடுதல் நிகழ்ச்சியும், இரண்டாம் நாள் திருவிழா கடந்த திங்கள் இரவு கட்டளை பூஜை நடைபெற்றது. அடுத்து மூன்றாம் நாளில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீரை ஊர்வலமாக ஏராளமான பக்தர்கள் கொண்டுவந்து சாமி தரிசனம் செய்து கும்பம் பாலித்தனர்.

நான்காம் நாள் திருவிழாவாக புதன் கிழமை இரவு கட்டளை பூஜையும், ஐந்தாம் நாள் திருவிழாவாக வியாழன் காலை அக்னிசட்டி எடுத்தல் அலகு குத்துதல் மற்றும் மாலை பூக்குழி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஆறாம் நாள் திருவிழாவாக வெள்ளி கிழமை காலை கிடாவெட்டி, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் மாலை மாவிளக்கு எடுத்தல நிகழ்ச்சியுடன், மாரியம்மன் சிறப்பு அலங்காரதுடன் ஊர்வலமாக சென்று பூஜையும் ஏழாம் நாள் திருவிழாவாக சனிகிழமை மாலை மாரியம்மன் மீண்டும் சிறப்பு அலங்காரதுடன் ஊர்வலமாக சென்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறயுள்ளது.