குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர் என நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். நித்தியானந்தா “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் ஆகக் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர்.
நான் வன்முறையை விரும்பாதவன்; என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவதும் இல்லை. “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க..இதுக்கு மேல தொடர்ந்து செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என நித்தியானந்தா தெரிவித்தார் .
நித்தியானந்தா வெளியிடப்பட்ட வீடியோ பதிவில், நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல… ஹஹஹாஹா.. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் சந்தேகமாக இருக்கு.. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு…எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க என நித்தியானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.