ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி. இந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி, உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கி இருக்கிறார்கள். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அதே மலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த தவெக சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் யுவராஜ் என்ற 26 வயது திருமணமான நபர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இவரை கைது செய்ய போதிய ஆதாரம் எதுவும் காவல்துறையினரிடம் இல்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த குழந்தை, மாணவி, யுவராஜ் என 3 பேருக்குமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். அதன்படியே 3 பேரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து, குழந்தைக்கு தந்தை ஆனது யுவராஜ் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக யுவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைதும் செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். யுவராஜ் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துக்கொண்டு, அதை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் பதிவிட்டு வலம் வருபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.