அரியலூர் நகர பாமக சார்பில், பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாமகவினர் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 37 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி 37 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமகவினர் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், அரியலூர் நகர பாமக சார்பில், நகர செயலாளர் சி.விஜி தலைமையில், நகர தலைவர் ஆர். காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தன், செந்தில், மணிகண்டன், சின்ன ராசு, வெங்கடேஷ், சக்தி, குமார், எழில் ராஜா ,சிவக்குமார், கணேஷ், ஆட்டோ மணி, வெற்றி, நல்ல தம்பி உள்ளிட்டோர் பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து, பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் .