ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம் என்றும் “நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு” என்ற பேனர் வைத்து OPS ஊரில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-வது கட்ட பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், பிரிந்தவர்கள் அனைவரையும் அதிமுகவில் விரைவில் இணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. இந்நிலையில் தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணமாக பெரியகுளம் வித்தியாசமாக பேனர் வைத்து வரவேற்பு கொடுத்தனர். அந்த பேனரில், நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு! அண்ணா திமுகவில் அனைவரும் உங்களோடு.. நீங்க மட்டும் போதும் தலைவா.. நாங்க இருக்கோம்!’ என்ற வரிகள் இடம்பெற்று இருந்தது.