அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டு ஒருங்கிணைந்த அதிமுக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-வது கட்ட பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கம்பம் நோக்கி எடப்பாடி பழனிசாமி வந்த போது, திடீரென பெண்கள் பலரும் அதிமுக கொடியுடன் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் கைகளில் ஒன்றிணைந்த அதிமுக என்ற பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் சில நிமிடங்கள் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் உடனடியாக முற்றுகையிட்ட பெண்களை அப்புறப்படுத்தினர். அப்போது சிலர் கீழே விழுந்ததால், அங்கு சூழல் மோசமாகியது.