திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் காமராஜர் சில எதிரில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது எதிர்த்து வளரும் தமிழகம் கட்சி சார்பில் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் புகைப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் காமராஜ் சிலை எதிரில் வளரும் தமிழக கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் காவேரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிங்கை சரவணன் தலைமையில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில் வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி கர்நாடகாவின் முதலமைச்சர் டி கே. சிவகுமார் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.