திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜி நடுப்பட்டியில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் ஒன்றிய செயலாளர் S. மணி அவர்கள், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ARK ரமேஷ் முதலியானோர் கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் சுப்புலட்சுமி அவர்கள், சண்முகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் அவர்கள், கிளைச் செயலாளர் தர்மராஜ் அவர்கள், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்கள், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சௌந்தர பாண்டியன் அவர்கள், கழக நிர்வாகிகள் சண்முகம், தங்கவேல், மூர்த்தி மற்றும் ராஜா என பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

இந்த மனுக்கள் மீது அதிகாரிகளிடம் பரிசீலனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது இம் முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மற்றும் சிட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு பெயர் நீக்குதல் சேர்த்தல், மருத்துவ முகாம் உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சார்பில் முகம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து ஒப்புக் சீட்டு பெற்றுக்கொண்டு பயனடைந்தனர்.