இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது.
அந்தவகையில், கள்ளக்காதலுக்காக பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த குன்றத்தூர் அபிராமியை எளிதில் மறக்க முடியாது. பல வருட காலம் சிறையில் உள்ள.தமிழகத்தையே உலுக்கிய குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோல கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற கோர சம்பவம் கோயம்புத்தூரில் அரங்கேறி நம்மையெல்லாம் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூரை அடுத்துள்ளது இருகூர் மாணிக்கம் நகரில் வசித்து வரும் தம்பதி ரகுபதி – தமிழரசி. இவர்களது 4 வயது மகள் அபர்ணாஸ்ரீ. இந்த தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தநிலையில்தான், கடந்த ஒரு வருடமாக 30 வயதான தமிழரசியின் நடத்தையில் மாற்றம் தென்பட்டுள்ளதை ரகுபதி கவனித்துள்ளார்.
இதனால் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் ஆளான ரகுபதி, மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்ட பிறகு, குழந்தையுடன் தமிழரசி தனியாக வசித்து வந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பருடன் தமிழரசிக்கு நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. தமிழரசி வீட்டில் தனியாக இருப்பதால், வசந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து, தமிழரசியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு சென்றுள்ளார்.
இதனை அக்கம்பக்கத்தினர் கவனித்துவிட்டு, தமிழரசியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். உடனே குடும்பத்தினரும், தமிழரசியை கண்டித்து, கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அபர்ணாஸ்ரீக்கு திடீரென வாந்தி எடுத்து மயங்கி விட்டதாக சொல்லி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி தமிழரசி சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது அபர்ணாஸ்ரீ உயிர் போய்விட்டதாக கூறிவிட்டனர். அப்போது, குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, குழந்தை மரணம் குறித்த தகவலறிந்து சிங்காநல்லூர் காவல்துறை, விரைந்து வந்து விசாரணையை துவங்கினர். அப்போது குழந்தையின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக, தமிழரசியின் குடும்பத்தினரே பகிரங்க குற்றச்சாட்டை கூறினார்கள். பிறகு காவல்துறை தமிழரசியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தமிழரசியின் கள்ளக்காதல் குழந்தையை பிரிந்து வந்தால்தான்,குடும்பம் நடத்துவேன் என்று கள்ளக்காதலர் கறாராக சொல்லிவிட்டாராம்.. குழந்தை உயிருடன் இருக்கும்வரை, வசந்த்துடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால், மகளை கொன்றுவிட்டதாக தமிழரசி வாக்குமூலம் தந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.