ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். மேலும் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்தார். திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்கி நடத்தி முடித்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீட்டை வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை என் பிள்ளைகளுக்கு வாழறதுக்காக வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன்.
நீங்க காசை சேர்த்துவைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீங்க. நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும்னு நினைக்கிறேன். கனிம கொள்ளையை தடுக்க ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பதுதான். வேறு வழியே கிடையாது கனிம கொள்ளை குறித்து என்கிட்ட கேட்குறீங்க.

மேலும் விஜய் நேற்று தனது முதல் பிரச்சார பயணத்தில் ரொம்ப கூட்டம் வந்ததுல என்ற கேள்விக்கு, ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்தார்.